யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் செயல் விளக்கம்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான கருவிகளின் செயல் விளக்கம் சென்னையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை செய்து காட்டப்பட்டது.


யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான கருவிகளின் செயல் விளக்கம் சென்னையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை செய்து காட்டப்பட்டது.
இதுகுறித்து, தமிழக தேர்தல் துறை வெளியிட்ட செய்தி: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தையும், வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியையும் இயக்குவது குறித்த செயல்முறை விளக்கக் கூட்டங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் நடத்தி வருகிறது. அதன்படி, சென்னையில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்காக தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
இக்கூட்டத்தை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். அதில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்க உரையாற்றினார். பெங்களூரூ பாரத் மின்னணு நிறுவனத்தின் பொறியாளர்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தையும், வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவியையும் இயக்கி செயல்முறை விளக்கம் 
அளித்தனர். 
மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவற்றை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இயக்கிப் பார்த்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com