திருப்பராயத்துறை சிலை திருட்டு வழக்கு: கோயில் நிர்வாக அதிகாரி கைது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி அருகே உள்ள திருப்பராயத்துறை சிவன் கோயிலில் சிலை திருடப்பட்ட வழக்கில், கோயில்  நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். இது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருப்பராயத்துறை சிலை திருட்டு வழக்கு: கோயில் நிர்வாக அதிகாரி கைது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை


திருச்சிராப்பள்ளி அருகே உள்ள திருப்பராயத்துறை சிவன் கோயிலில் சிலை திருடப்பட்ட வழக்கில், கோயில்  நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார். இது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருச்சிராப்பள்ளி அருகே திருப்பராயத்துறை அருள்மிகு தாருகானேசுவரர் திருக்கோயில் மிகவும் பழமையானது. பிற்கால சோழ மன்னர் ஆதித்ய தேவர் கால கட்டத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், சூரியனாருக்கு தனி பிராகாரம் இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் ஆதித்ய தேவர், தனது ஆட்சிகாலத்தின் 27-வது ஆண்டை நிறைவு செய்தற்காக இந்தக் கோயிலை கட்டியுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்தக் கோயில் இருந்த 1,100 ஆண்டுகள் பழைமையான போகசக்தி அம்மன் ஐம்பொன்  சிலை,  சண்டிகேசுவரர் ஐம்பொன் சிலை, இந்தக் கோயிலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மற்றொரு கோயிலின் அங்காளம்மன் ஐம்பொன் சிலை ஆகியன திருடப்பட்டு, திருட்டை மறைக்க போலி சிலைகள் செய்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி  பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார், திருட்டு குறித்து விசாரணை செய்தனர்.
 விசாரணையில், கோயிலில் பணிபுரியும் சில ஊழியர்களே சிலைகளை களவாடி, விற்றிருப்பதும், திருட்டை மறைப்பதற்காக கோயிலில் இருந்த மன்னர் காலத்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட பாத்திரங்களை உருக்கி சுவாமிமலையைச் சேர்ந்த ஒரு ஸ்தபதி மூலம் போலி சிலைகளை செய்து, அங்கு வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் திருடப்பட்ட சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.40 கோடியை தாண்டும் என்பதும், திருடப்பட்ட சிலைகளை உயர் அதிகாரி மூலம் வெளிநாட்டில் விற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நிர்வாகி அதிகாரி கைது: இது தொடர்பாக அந்தக் கோயில் ஊழியர் திருமாலைக்கட்டி ராமநாதன், கோயில் கணக்கர் கண்ணன் ஆகியோரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். 
இந்நிலையில் வழக்கின் முக்கிய எதிரியான கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆனந்தகுமார் ராவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஆனந்தகுமார் ராவ், கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com