தமிழக அரசின் 2019-20 பட்ஜெட்: சிறப்பம்சங்கள்

தமிழக அரசின் 2019 - 2020 ஆம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று
தமிழக அரசின் 2019-20 பட்ஜெட்: சிறப்பம்சங்கள்

தமிழக அரசின் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். 

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் ஜனவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.

இந்த நிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

  • ​தமிழக தனி நபர் வருமானம் 2017-18 ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 267 ரூபாயாக உயர்வு.
  • தமிழக பொருளாதாரத்தில் சேவைத் துறையின் பங்கு 51.86% ஆக உள்ளது.
  • தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 44,176 கோடியாக இருக்கும்,வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.97 லட்சம் கோடியாக இருக்கும்.
  • தமிழகத்தின் வளர்ச்சி வரும் நிதியாண்டில் 8.16 சதவீதமாக இருக்கும்.
  • கல்வி, பாலின சமத்துவம் உள்ளிட்ட குறியீடுகளில் தனிக்கவனம் செலுத்த மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு 
  • ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை
  • விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் 
  • விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு 
  • தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்
  • வரும் நிதி ஆண்டில் அரசின் வருவாய் ரூ.1,97,117 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தியில் 
  • சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசுக்கு சுமார் ரூ.57 ஆயிரத்து 600 கோடி செலவு ஏற்படும். 
  • வரிகள் மூலம் அரசுக்கு ரூ.1,37,964 கோடி வருவாய் கிடைக்கும்.
  • வரும் நிதியாண்டில் தமிழக அரசின் செலவு ரூ.2,10,240 கோடியாக இருக்கும்.
  • தமிழக அரசுக்கு வரும் நிதியாண்டில் சுமார் ரூ.48 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக இருக்கும். 
  • சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு. 
  • வரும் நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து மானியமாக சுமார் ரூ.22 ஆயிரம் கோடி கிடைக்கும்.
  • 2019-19 ஆம் ஆண்டு கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடியாக இருந்தது. 
  • தனி நபர்களின் ஆண்டு வருமானம் தமிழகத்தில் ரூ.1,42,267 கோடியாக உயர்ந்துள்ளது. 
  • மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • அரசு-தனியார் பங்களிப்பு முறையில், ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
  • 2 லட்சம் நான்குசக்கர வாகனங்கள், 2 லட்சம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள்
  • அரசு-தனியார் பங்களிப்பு முறையில், ரூ.2000 கோடி செலவில் சென்னையில், விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
  • தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அளிக்கும்
  • சொற்பமாக உள்ள நில ஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது.
  • சென்னையில் 2000 கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்தம் இடம் அமைக்கப்படும்.
  • நிலத்தடியில் 2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 4 லட்சம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் திட்டத்திற்கு ரூ.2000 கோடி.
  • மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும்.
  • மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்.
  • கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு.
  • ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூரில் அடையாற்றில் நீர்தேக்கம். 
  • மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ் கொண்டுவருவதற்காக 9 நிலையான மண்டலங்களாக பிரித்து, மண்டலத் திட்டங்கள் தயார் செய்யப்படும். 
  • மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோக்கு திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்குள் நகர் ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும்.
  • முதல்கட்டமாக, கோவை, மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும். இதன் மூலம், பல்வேறு முக்கிய திட்டங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்குமான வழிவகை ஒட்டுமொத்த திட்டமிட்ட வளர்ச்சி உறுதிசெய்யப்படும்.
  • திருமங்கலத்தை தலையிடமாக கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும். 
  • சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்க ரூ.3958 கோடி ஒதுக்கீடு
  • வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து மற்றும் ஆயுக் காப்பீடு திட்டம்
  • வீட்டுவசதி மற்றும் நகரப்புற மேம்பாட்டுத் துறைக்காக 6,265.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
  • விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
  • புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
  • காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு
  • செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையின் கீழ் இதுவரை ரூ.3,074.84 கோடி மதிப்பீட்டில் 1,768 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறை மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது
  • வரும் நிதியாண்டில் சிவகங்கை கோட்டத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு 622 கி.மீ. சாலைப் பணிகள் ரூ.715 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • வரும் நிதி ஆண்டில் காவல்துறைக்கு மட்டும் ரூ.8084.80 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டுக்கான பயிர் காப்பீடு திட்டத்தில் புதிதாக பயிர்கள் சேர்க்கப்படும்
  • இடி மின்னல், திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு கிடைக்க நடவடிக்கை
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு
  • ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற பன்னாட்டு வங்கிகளிடம் நிதியுதவி கோருவதற்கான விரிவான திட்டத்தை அரசு தயாரித்து வருகிறது. மேலும் 2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படும் ரூ.1361 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டில் 90 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு 10 குதிரை திறன் கொண்ட 2000 பம்பு செட்டுகள் வழங்கப்படும். சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம் நீர் மேலாண்மை மேம்படும்.
  • வரும் நிதி ஆண்டில் மேலும் 5000 ஒருங்கிணைந்த பண்ணை அலகுகள் அமைக்கப்படும் ரூ.101.62 கோடி ஒதுக்கீடு
  • ரூ.100 கோடி செலவில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளும் உருவாக்கப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைக்க உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது
  • வேளாண் இயந்திரயமமாக்கலுக்காக ரூ.172 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க உத்தேசம்.
  • பழங்கள் மற்றும் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு
  • இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்
  • வேளாண்மை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு
  • வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம்
  • ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி.
  • 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். 
  • உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ.169.81 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பாசன மேலாண்மை நவீனமயமாக்குதலுக்கு ரூ.235.02 கோடி நிதி ஒதுக்கீடு.
  • தமிழ் மொழி வளர்ச்சிக்காக ரூ.54.76 கோடி ஒதுக்கீடு
  • யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 
  • ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 
  • அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
  • 2000 பிஎஸ்-6 பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்
  • ரூ.420 கோடியில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பத்தில் மீன் பிடி துறைமுகம் அமைக்க அனுமதி.
  • வரும் நிதியாண்டில், 1,986 கி.மீ. நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு. 
  • பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  • வரும் நிதியாண்டில் ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும். 
  • அண்ணா பல்கலை.யிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 
  • அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்படும். 
  • பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584.21 கோடி ஒதுக்கீடு.
  • உலக வங்கி கடனுதவியுடன் ரூ.2,685.91 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். 
  • அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள், கருவிகள், பொருட்கள் வழங்கப்படும் சிகிச்சை நெறிமுறைகளும் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.247 கோடி ரூபாய் செலவிடப்படும்
  • ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் உதவியுடன் ரூ.5,890 கோடி செலவில் 12,000 புதிய பிஎஸ்-4 தரத்திலான பேருந்துகள், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் திட்டம்
  • ரூ.116 கோடி செலவில் நீரோடி, மார்த்தாண்டத்துறை ஆகிய இடங்களில் கடலரிப்பு தடுப்பான்கள் அமைக்க அனுமதி.
  • 80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 தொலைபேசிகள் வழங்கப்படும்.
  • நீர்நிலைகளை பொதுமக்கள் பங்களிப்புடன் புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு. 
  • அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். அந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம்.
  • வரும் நிதி ஆண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சென்னையில் விரிவான திடக்கழிவு மேலாண் திட்டத்தை ரூ.1546 கோடி ரூபாயில் செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி.
  • கொடுங்கையூர் பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை. 
  • நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
  • அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு. 
  • 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும் நகர்ப்புர வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்ளை விரைவில் வெளியிடப்படும்.
  • நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605.19 கோடி ஒதுக்கீடு
  • தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் 250 மெ.வா. திறன்கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள்
  • ரூ.2,350 கோடி மதிப்பீட்டில் 500 மெ.வா. திறன்கொண்ட கடலாடி மிகஉய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம்
  • சாகுபடிக்கு பயன்படாத சமுதாய மற்றும் பட்டா நிலங்களில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம்
  • பசுமைச் சூழல் நிதி மூலம் 5 மெ.வா திறன்கொண்ட சிறிய அளவிலான ஊரக புதுப்பிக்கத்தக்க மின்பூங்காவுடன் அம்மா பசுமை கிராமம்.
  • அம்மா பசுமை கிராமம் என்ற நிலையான மின்கிராமங்களை, தமிழ்நாடு மின் மேம்பாட்டு முகமை ஏற்படுத்தும்
  • சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்
  • எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு
  • மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்
  • மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.20,196 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது
  • மாநில அரசும் ரூ.40,941 கோடி மொத்த மதிப்பீட்டில் திட்டப் பணிகளை மேற்கொள்ள நிருவாக அனுமதி அளித்துள்ளது
  • மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயிலின் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும். 
  • பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு
  • மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் பயனை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கப்படும். 
  • நவீன உயர்நிலை தொழிற்பிரிவுகளுக்கான பயிற்சிகள், 20 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ரூ.38 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • தமிழகத்தில் முதல் முறையாக 500 மின்சார பேருந்துகளை சென்னை, கோவை, மதுரையில் இயக்க நடவடிக்கை.
  • சிறுபான்மையினர் நலத்துறைக்காக ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நகராட்சிகளில் குடிநீர் தேவைக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு .
  • நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.284.70 ஒதுக்கீடு.
  • நபார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ.811 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 825 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கு ரூ. 12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசின் கடன் சுமை ரூ. 42,000 கோடியாக அதிகரிப்பு.
  • ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ. 18,273 கோடி ஒதுக்கீடு.
  • பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ. 2,276 கோடி.
  • கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும்.
  • நுண்ணீர் பாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ரூ.1361 கோடி செலவில் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
  • பயிர் கடனை உரிய காலத்தில் செலுத்தும் நபருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
  • விலையில்லா மாடு, ஆடு வழங்கும் திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். இந்த திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  • மீன்பிடித் தடைக்கால உதவித்தொகைக்காக ரூ170.13 கோடி.
  • 160 ஐசாட் - 2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும்.
  • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறைக்கு ரூ.12,563.83 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு மருத்துவமனைகளில் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாக கிடைக்க உறுதி செய்ய திட்டம்.
  • மீனவர் நலனில் தனி கவனம் செலுத்தி தமிழக அரசு, மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்தப்படும்.
  • பாக் விரிகுடா பகுதியில் ரூ.1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  • மீன்பிடி துறைமுகங்களை கட்ட தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்ப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு.
  • காவல்துறையில் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ.403.76 கோடி ஒதுக்கீடு.
  • போக்குவரத்து துறைக்காக ஒட்டுமொத்தமாக ரூ.1297.83 கோடி ஒதுக்கீடு.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ. 1362.27 கோடி ஒதுக்கீடு.
  • 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு.
  • மாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 1656.90 கோடி ஒதுக்கீடு.
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ. 140.11 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு. 
  • கைத்தறி உதவி திட்டத்துக்கு 40 கோடி ஒதுக்கீடு. 
  • விலையில்லா வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு .
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1170.56 கோடி ஒதுக்கீடு.
  • பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக ரூ. 726.32கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு.
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி
  • சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க ரூ. 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது. 
  • 2020 மார்ச் 31ல் தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். கடந்த ஆண்டு ரூ.3.55 லட்சம் கோடியாக இருந்தது. 
  • ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும். 
  • 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும். 
  • அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை, சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது. 
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்காக ரூ 40 கோடி ஒதுக்கீடு. 
  • ஆதி திராவிட மாணவர்களின் உயர்கல்வி உதவி தொகைக்காக 1857.13 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஆதிதிராவிடர் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு.
  • பிற்படுத்தப்பட்டோர் நலன் பள்ளிக்கல்விக்காக ரூ. 290.71 கோடி ஒதுக்கீடு 
  • பிற்படுத்தப்பட்ட விடுதி மாணவர்களுக்காக உணவு செலவுகளுக்காக ரூ. 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • சிறுபான்மையினர் நலனுக்காக ரூ. 14.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகள் மற்றும் 3 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
  • தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு.
  • காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் ரூ.1560 கோடிமதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது.
  • 2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு 
  • 2000 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
  • 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கான கொள்கைகள் உருவாக்கப்படும்.
  • சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும். 
  • மரபு திறன் மிக்க கலப்பின காளைகளின் விந்துகளை கொண்டு புதிய உறை விந்து உற்பத்திய நிலையம் அமைக்கப்படும்.
  • பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு
  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு. 
  • மத்திய அரசின் ஒய்வூதிய திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு.
  • போட்டித்  தேர்வுகளுக்கு பயிற்சி மையம்,வேலை வழங்கும் நிறுவனங்களையும், வேலை தேடுவோரையும் இணைக்கும் மாநில தொழில் மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு திறனுக்காக 200 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. 
  • ஆண்டுதோறும் 10 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகள் உயர்நிலை சிறப்பு தகுதி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
  • மாணவ மாணவிகளுக்கான போக்குவரத்து பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.
  • மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்படுகிறது. 
  • ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை என்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், 2019-20 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ16,315 கோடியாக குறையும் என்றும் வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றார். 
  • மக்களவைத் தேர்தல் காரணமாக முன்கூட்டியே 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான வரி இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
  • பட்ஜெட் கூட்டத் தொடரை தொடர்ந்து எத்தனை நாட்கள் பேரவையை நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது.
  • நிதியமைச்சராக தனது 8 வது நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com