சுடச்சுட

    

    மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்தோர் 28.34 லட்சம் பேர்

    By DIN  |   Published on : 09th February 2019 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    medical


    தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 28.34 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
    எதிர்வரும் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.1,363 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
    நிதி நிலை அறிக்கையில் இதுதொடர்பாக பன்னீர்செல்வம் கூறியதாவது: ஏழை - எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து (2011-12) இதுவரை 28.34 லட்சம் பேர் அதன் வாயிலாக பயனடைந்துள்ளனர். அவர்களது மருத்துவ செலவினங்களுக்காக ரூ.5,527 கோடியை அரசு வழங்கியுள்ளது.
    இந்த நிலையில், பிரதமரின் மக்கள் நலத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்) நடைமுறைப்படுத்தப்படுவதை அடுத்து, அதனுடன் மாநில காப்பீட்டுத் திட்டமும் தற்போது ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.1,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai