80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள்

வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்
80 ஆழ்கடல் மீன் பிடி குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள்


வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
நிதிநிலை அறிக்கையில் அவர் கூறியிருப்பது: வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி, திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் ரூ.420 கோடி மதிப்பீட்டில் துறைமுகங்கள் கட்டுவதற்கு  அரசு அனுமதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை ரூ.116 கோடி செலவில் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட் -2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com