சுடச்சுட

  

  உலகின் சிறந்த படையாக சிஐஎஸ்எஃப் மாறியுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

  By DIN  |   Published on : 11th February 2019 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AKMAAA

  மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உலகிலேயே சிறந்த படையாக மாறியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
   அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் துணை உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற து. இதில் கிரண் ரிஜிஜூ பங்கேற்றுப் பேசியது:
   இங்கு பயிற்சி பெற்றுள்ள துணை உதவி ஆய்வாளர்கள் அனைவருக்கும் அனைத்து பயிற்சிகளும் சிறப்பான நிலையில் வழங்கப்பட்டுள்ளன.
   எனினும், அவர்களுக்கு விமானநிலையங்களில் பணிபுரிவதற்கான சிறப்புப் பயிற்சிகள் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே அவர்கள் விமான நிலையப் பணிகளுக்கு பணிபுரிய தகுதியானவர்களாக மாறியுள்ளனர். இப்படைக்கும் நாட்டுக்கும் சொத்தாக மாறியுள்ள அவர்கள் தங்கள் பணியை நேர்மையான முறையில் ஆற்றுவார்கள் என நம்புகிறேன்.
   மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தற்போது நாட்டில் 61 விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எஃகு மற்றும் கனரக தொழிற்சாலைகள், சுரங்கங்கள், அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள், தில்லி மெட்ரோ ஆகியவற்றின் பாதுகாப்புக்காகவும், மிக முக்கிய நபர்களின் பாதுகாப்புக்காகவும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் 1.55 லட்சம் வீரர்களுடன் பணியாற்றி வருகிறது. இதனாலேயே உலகின் சிறந்த படையாக சிஐஎஸ்எஃப் மாறியுள்ளது.
   மத்திய அரசு, இப்படை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. விரைவில் நாட்டின் அதிமுக்கிய பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் விமான நிலையங்களான ஜம்மு, ஸ்ரீநகர், லே ஆகியவை சிஐஎஸ்எஃப் படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் வர உள்ளன. சிஐஎஸ்எஃப் படை அனைத்து ஆயுதப் படைகள் அதாவது மத்திய, மாநில காவல்துறையினருடன் இணைந்து இந்தியாவை வலிமையான நாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்றார் அவர்.
   முன்னதாக, அரக்கோணம் வந்த கிரண் ரிஜிஜுவை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், சார்-ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
   தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு மண்டல பயிற்சி மைய முதல்வரும் டிஐஜியுமான வினய் கஜ்லா தலைமை வகித்தார்.
   முதலாவதாக பயிற்சி முடித்த 105 பெண்கள் உள்ளிட்ட 1,100 துணை உதவி ஆய்வாளர்களின் அணிவகுப்பை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
   தொடர்ந்து அனைத்து பயிற்சிகளிலும் சிறந்து விளங்கிய நீலம் பாடிதார், மைதானப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய ஆசுதோஷ் சிங், துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிறந்து விளங்கிய நகுல், உள்ளரங்கப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய செüம்யா ராவத் ஆகிய வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகளையும், அணிவகுப்பை தலைமையேற்று சிறப்பாக நடத்திய அன்சூல் பிரதாப் சிங், கவிதா யாதவ் ஆகியோருக்கும் அவர் பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் படையின் தலைமை இயக்குநர் ராஜேஷ் ரஞ்சன், ஐஜி (தெற்கு) எம்.கே.நாயக் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் பங்கேற்றனர். விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற படையினரின் கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டு ரசித்தார்.
   விழாவுக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "மேற்கு வங்க மாநிலத்தில் சனிக்கிழமை, திரிணமூல் காங்கிரûஸச் சேர்ந்த கிரிஷ்நகர் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு சட்டம்-ஒழுங்கு சரியான நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது.
   மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் மாநில அரசு ஒழுங்காக ஈடுபட்டால் இது போன்ற பிரச்னைகள் வராது' என்றார்.
   தொடர்ந்து செய்தியாளர்கள் "அருணாசலப் பிரதேசத்தில் விமான நிலையம் திறப்பதற்கு சீனா எதிர்ப்பு காட்டத் தொடங்கியுள்ளதே?' எனக் கேட்டதற்கு "இது மிக முக்கியமான பிரச்னை' என்று அவர் பதிலளித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai