சுடச்சுட

  

  திமுகவை விமர்சித்த கமலுக்கு கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்

  By DIN  |   Published on : 11th February 2019 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுகவை மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் விமர்சிப்பது தேர்தல் நேரத்தில் பாஜக-வுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படும் எந்தக் கொள்கைக்கும் உதவாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
   திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என நடிகர் கமலுக்கு, கே.எஸ்.அழகிரி சனிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், திமுக மீதான கமலின் விமர்சனத்தைத் தொடர்ந்து, அவருக்கு கண்டனம் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
   மதச் சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என்று தலைநகர் தில்லியில் பத்திரிகையாளர்களிடம் கருத்து கூறினேன். பாஜக, அதிமுக மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் அவ்வாறு பேட்டியளித்தேன். அந்தக் கருத்தை நான் கூறும்போது, தி.மு.க.-வை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்துக்கு வரவில்லை.
   கமல் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜக-வுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
   தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai