தொழில்நுட்பக் கோளாறு: துவக்கப்பட்டு 2வது நாளே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

புதிய ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டு 2வது நாளே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறு: துவக்கப்பட்டு 2வது நாளே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு


சென்னை: புதிய ரயில் பாதையில் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டு 2வது நாளே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

நேற்று புதிதாக திறக்கப்பட்ட டிஎம்எஸ் -  வண்ணாரப்பேட்டை வரையிலான ரயில் பாதையில் நேற்றும் இன்றும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் ஏறினர்.

இந்த நிலையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான ரயில் பாதையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் ரயிலில் இருந்த பயணிகள் பாதியிலேயே இறக்கிவிடப்பட்டனர். இதனால், அலுவலகத்துக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ ரயில் சேவையில் இதுபோல் அடிக்கடி ரயில்சேவை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

முன்னதாக, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

 திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் அரசு விழா மற்றும் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

அரசு விழாவில், சென்னை வண்ணாரப்பேட்டை-டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, நீல வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், உயர் நீதிமன்றம், மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வருடன் இணைந்து திறந்துவைத்தார்.

திறந்து வைக்கப்பட்ட அடுத்த நாளே இப்பாதையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com