புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம்: களத்தில் இறங்கி மக்களை மிரட்டிய ஆளுநர்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம்: களத்தில் இறங்கி மக்களை மிரட்டிய ஆளுநர்


புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சாலையின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்துக் காவல்துறையினர் மைக்குகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இன்று காலை முக்கியச் சாலைகளுக்கு வந்தார். அங்கே, வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி, அவர்களை ஹெல்மெட் அணியுமாறு அறிவுறுத்தினார். மேலும் 3 பேராக இரு சக்கர வாகனத்தில் வருவோரையும், அதிக நபர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோக்களையும், நடு ரோட்டில் ஓடிச் சென்று நிறுத்தி, கூடுதலாக இருந்தவர்களை இறக்கி விட்டு வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை கூறினர்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், கிரண்பேடியைப் பார்த்தும், உடனடியாக ஹெல்மெட் வாங்குவதாவும் கூறிவிட்டுச் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com