
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மகள் ரஹீமாவுடன் கலந்து கொண்டார்.
2019-ஆம் ஆண்டுக்கான 61-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மகள் ரஹீமாவுடன் கலந்து கொண்டார்.
ஏ.ஆர்.ரகுமான், கருப்பு மற்றும் சாம்பல் வண்ண ஆடை அணிந்து இந்த விழாவில் கலந்து கொண்டார். அதேசமயம், அவரது மகள் முழுவதும் கருப்பிலான ஆடையை அணிந்து வந்திருந்தார்.
மேலும், ஏ.ஆர்.ரகுமானுடன், லண்டனைச் சேர்ந்த பிரசாந்த் மிஸ்திரி, நியூயார்க்கைச் சேர்ந்த ஃபல்குனி ஷா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சத்னம் கவுர் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களது சிம்பல், ஃபலுஸ் பசார், பீலவ்டு ஆல்பங்கள் பல்வேறு பிரிவுகளில் கிராமி விருதுக்கான போட்டியில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.