சுடச்சுட

    
    ramamohan_rao


    நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ். கட்சியில் இணைந்துள்ள ராமமோகன ராவ், கட்சியின் அரசியல் ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

    இது குறித்து செய்தியாளர்களிடம் ராம மோகன ராவ் பேசுகையில், கட்சியின் அரசியல் ஆலோசகராக சேருமாறு எண்ணைக் கேட்டுக்கொண்டதுடன், கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 

    ஜெயலலிதாவை போன்று பவன் கல்யாணமும் மக்களுடன் மக்களாக பழகும் தன்மை கொண்டவர் என்று தெரிவித்தார். 

    2016 டிசம்பர் மாதம் அலுவலகம், வீடுகளில் நடத்திய வருமான வரித்துறையினர் நடத்தி அதிரடி சோதனையை அடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai