சுடச்சுட

  

  தமிழக முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு!

  By DIN  |   Published on : 12th February 2019 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tamilesai


  சென்னை: ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்; ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

  வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி விவசாய தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசு தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதி உதவியாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் கிராமப்புறத்தில் 35 லட்சம் ஏழை குடும்பங்களும் நகர்ப்புறத்தில் 25 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என முதல்வர் அறிவித்தார். 

  இந்த அறிவிப்பை பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில்,  ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai