சுடச்சுட

  

  பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: எல்.கே. சுதீஷ்

  By DIN  |   Published on : 12th February 2019 02:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  suthees

  பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார். 

  தேமுதிக கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு, 19ஆவது ஆண்டு விழாவையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் கொடியேற்றினார். 

  பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், 
  கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும். பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.

  நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அதை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai