Enable Javscript for better performance
சென்னையில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

    By DIN  |   Published on : 12th February 2019 11:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    earthquake

    சென்னை :   வங்கக்கடலில் வடகிழக்கே 609 கி.மீ தொலைவில் இன்று காலை 7.02 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

    சென்னையில் சில இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

    சென்னைக்கு வடகிழக்கே 609 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 10 கிலோ மூட்டர் ஆழத்தில் உருவான நில நடுக்கம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

    நில நடுக்கம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், சென்னையில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்கலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai