
மத்திய அரசை தம்பிதுரை விமர்சித்ததில் தவறில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திங்கள்கிழமை இடைக்கால பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தில் பங்கேற்று அவர் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜிஎஸ்டியை தங்களது மூளையில் உதித்த திட்டமாக காங்கிரஸும், பாஜகவும் கூறுகின்றன. இதன் மூலம் மாநில அரசின் அதிகாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியை பொருத்தமட்டில் பணம் மத்திய அரசிடம் உள்ளது. அதைப் பெறுவதற்கு மாநில அரசுகள் கெஞ்சும் நிலை உள்ளது என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது தனிப்பட்ட கருத்தா? அரசின் கருத்தா? என தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மத்திய பாஜக அரசை விமர்சித்து மக்களவையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை. ஜிஎஸ்டியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். ஒரு திட்டத்தால் மாநிலங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மாநில அரசின் கடமை என்றார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G