சுடச்சுட

  

  எம்எல்ஏ இறந்தால் இடைத்தேர்தலுக்கு பதில் மாற்று வழிக் கூறும் நீதிமன்றம்: நல்லா இருக்கே!

  By DIN  |   Published on : 13th February 2019 01:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Vote_Machine


  சென்னை: ஒரு தொகுதியில் எம்எல்ஏ இறப்பதால் நடத்தப்படும் இடைத்தேர்தலை தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றம் மாற்று யோசனையை அளித்துள்ளது.

  திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு, ஒரு தொகுதியில் எம்எல்ஏ மரணம் அடைந்தால், அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக இறந்தவரின் கட்சியைச் சேர்ந்த ஒருவரை எம்எல்ஏவாக நியமிக்கலாமே?  என்று யோசனையை முன் வைத்தனர்.

  மேலும், தகுதி இழப்பு செய்யப்பட்டவர்களுக்கு தங்களது கருத்து பொருந்தாது என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 18க்கு ஒத்திவைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai