சுடச்சுட

  


  மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் அதிமுக ஆட்சி க்ளின் போல்டாகும் என்று திமுகவும், அது நோ பாலாகத்தான் இருக்கும் என்று அதிமுகவும் பேரவையில் ருசிகரமாக விவாதித்துக் கொண்டன.
  சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசியது: 
  முதல்வரும், துணை முதல்வர் சிக்ஸர், சிக்ஸராக அடிப்பதாக அதிமுக உறுப்பினர் செம்மலை பேசினார். அடிப்பது சிக்ஸராக இருக்கலாம். ஆனால், மு.க.ஸ்டாலின் போடும் பந்தில் அதிமுக ஆட்சி க்ளின் போல்டாகப் போகிறது என்றார்.
  அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் எழுந்து, உறுதியாகச் சொல்கிறேன். அது நோ பாலாகத்தான் இருக்கும் என்றார். 
  இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
  பின்னர், அமைச்சர் தங்கமணி எழுந்து,  மைதானத்துக்கு திமுகவினர் வரவே போவதில்லை. வந்தால்தானே பந்தைப் போட முடியும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai