சுடச்சுட

  

  சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

  By DIN  |   Published on : 13th February 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivakasi

  சிவகாசியில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பட்டாசுத் தொழிலாளர்கள்.


  விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, சிவகாசியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பட்டாசுத் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தக் கூடாது; பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனால் விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் கடந்த 100 நாள்களாக மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
  இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மூடப்பட்ட  பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும். வேலை இழந்த பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளாக சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதை பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள மைதானத்தில், காத்திருப்புப் போராட்டம்  நடைபெற்றது.   இதில் ஞானசேகரன் (காங்.), திலகபாமா (பாமக), செய்யது ஜஹாங்கீர் (இந்திய தேசிய லீக்), வெங்கட்ராமன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
  இதில் பட்டாசுத் தொழிலாளர்கள்,  தயாரிப்பாளர்கள்,  விற்பனையாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் புதன்கிழமை நிறைவு பெறும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai