Enable Javscript for better performance
டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை: அமைச்சர் மணிகண்டன்- Dinamani

சுடச்சுட

    

    டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை: அமைச்சர் மணிகண்டன்

    By DIN  |   Published on : 13th February 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manikandan


    டிக் -டாக் செயலிக்குத் தடை விதிக்க தமிழக  அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
    சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:
    டிக்-டாக் என்ற செயலி சமூகத்தைச் சீரழித்து வருகிறது. அதில், ஆபாசக் காட்சிகள் அரங்கேற்றப்
    படுகின்றன. குடும்பப் பெண்கள் எல்லாம் தவறாகச் சித்திரிக்கப்படுகின்றனர். எனவே, இந்தச் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்றார்.
    அப்போது, அமைச்சர் மணிகண்டன் எழுந்து கூறியது:
    டிக்-டாக் செயலியால் தமிழக கலாசாரம் சீரழிக்கப்படுகிறது என்பது உண்மைதான். இது தொடர்பாக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர்.  புளுவேல் கேம்க்கு தடை விதித்ததுபோல மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, டிக் - டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai