சுடச்சுட

    


    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து  ரூ.25,160 விற்பனை செய்யப்பட்டது.
    சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை  நிர்ணயிக்கப்படுகிறது.
    சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.3,145-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா  குறைந்து, ரூ.43.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.43,100 ஆகவும் இருந்தது.
    செவ்வாய்க்கிழமை விலை 
    ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம்    3,145
    1 பவுன் தங்கம்      25,160
    1 கிராம் வெள்ளி    43.10
    1 கிலோ வெள்ளி    43,100
    திங்கள்கிழமை விலை 
    ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம்    3,150
    1 பவுன் தங்கம்    25,200
    1 கிராம் வெள்ளி    43.20
    1 கிலோ வெள்ளி    43,200
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai