சுடச்சுட

  

  தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்: ஜி.கே.வாசன்

  By DIN  |   Published on : 13th February 2019 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  வரும் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 
  கட்சி நிர்வாகி இல்லதிருமண விழாவில் பங்கேற்க காஞ்சிபுரம் வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 
  தமிழக அரசியலில் பெரும்பாலும் கட்சிகள் கூட்டணி அமைத்தே போட்டியிடக்கூடிய எண்ணத்தில் செயல்படத் தொடங்கியுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல. நான் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்களிடம் கருத்தை கேட்டு வருகிறேன். மாவட்டத் தலைவர்களும் மக்களுடைய எண்ணங்களை என்னிடம் தெரிவித்து வருகின்றனர். 
  அதன்பேரில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நான் தேர்தல் நெருங்கும் போது அறிவிப்பேன். 
  தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் குறித்த இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai