சுடச்சுட

  

  மாநகராட்சி மருத்துவமனைகளில் கர்ப்பப்பை புற்றுநோயை கண்டறியும் கருவி: அமைச்சர் வேலுமணி பதில்

  By DIN  |   Published on : 13th February 2019 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SP-Velumani


  பெண்களுக்கான கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறிவதற்கான கருவியை மாநகராட்சி மருத்துவமனைகளில் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
   சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, துறைமுகம் தொகுதி 60-ஆவது வட்டத்தில் மகப்பேறு மருத்துவமனையை மீண்டும் அமைக்க முன்வருமா என திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கேள்வி எழுப்பினார். மேலும், தனது தொகுதியில் 8 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்ததாகவும், அவை 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது ஏற்கெனவே 10 மண்டலங்களாக செயல்பட்டு வந்த பகுதிகள் ஏழு மண்டலங்களாக குறைக்கப்பட்டன. மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 8 மண்டலங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு 15 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டன என்றார்.
  இதைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ., சேகர்பாபு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கென போதிய ஆய்வுக் கூடங்களோ அல்லது மருத்துவக் கருவிகளோ இல்லை. கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறிவதற்கான சிறிய அளவிலான கருவி உள்பட நவீன கருவிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
  இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து வகையான காய்ச்சல், கர்ப்பகால பரிசோதனை, ரத்த சோகை கண்டறிதல், எச்.ஐ.வி., ஆலோசனை என அனைத்தும் மேம்படுத்தப்பட்ட ஆய்வுக்கூட கருவிகளைக் கொண்டு இலவசமாக செய்யப்படுகிறது. கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறிவதற்கான கருவியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai