அன்று ஆயிரம், இன்று இரண்டாயிரம்: நீதிமன்றக் கதவைத் தட்டியிருக்கும் புதிய பிரச்னை

தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.
அன்று ஆயிரம், இன்று இரண்டாயிரம்: நீதிமன்றக் கதவைத் தட்டியிருக்கும் புதிய பிரச்னை


சென்னை: தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி பேரவையில் அறிவித்தார்.

இந்த சிறப்பு நிதியுதவி மூலம் தமிழகத்தில் உள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இந்த மாத இறுதிக்குள், ஏழைக் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2000ம் வரவு வைக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி நேற்று பேரவையில் அறிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமரிசனமும், எதிர்ப்பும் எழுந்திருக்கும் நிலையில், இந்த நிதியுதவி, விரைவில் எதிர்கொள்ளவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்ல என்பதை பழனிசாமி தெள்ளத் தெளிவாக விளக்கிச் சொன்னார்.

இந்த நிலையில்தான் ரூ.2000 உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் என்பவர் முறையீடு செய்துள்ளார். இந்த திட்டம் சட்டவிரோதம் என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, அரசின் கொள்கை முடிவு சரியாக இல்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் என்றும், கட்சிப் பணம் என்றால் பரவாயில்லை, தமிழக அரசின் பணம் என்பதால் நீதிமன்றம் கேள்வி எழுப்பும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

நீதிமன்றத்தில் ரூ.1000 பொங்கல் பரிசு கடுமையான விமரிசனத்துக்கு உள்ளான நிலையில், தற்போது 2000 ரூபாய் உதவித் தொகை விவகாரமும் நீதிமன்றக் கதவைத் தட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com