சின்னத்தம்பி யானையைப் பிடிக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி 

வனத்துறையினர் சின்னத்தம்பி யானையைப் பிடிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சின்னத்தம்பி யானையைப் பிடிக்கலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி 

சென்னை: வனத்துறையினர் சின்னத்தம்பி யானையைப் பிடிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடை கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது சின்னத்தம்பி யானையை முகாமுக்கு அனுப்புவது தொடர்பாக, புதனன்று விரிவான விளக்கம் அளிக்கப்படும என்றும் எனவே வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் யானைகள் நிபுணர் அஜய் தேசாய் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவுகளை கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்பக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி யானையின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையைப் பிடிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சின்னத்தம்பி மூலம் பொதுமக்களுக்கு, பயிர்களுக்கோ சேதம் ஏற்படக் கூடாது என்று கவனமாக இருப்பதாகவும், சின்னதம்பி தற்போது மிகவும் சகஜமாக இருப்பதாகவும்" தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “முதுமலை பகுதியில் சுற்றித் திரியும் வனத்துறையினர் சின்னத்தம்பி யானையைப் பிடிக்கலாம் என்றும், அதெல்லாம் அதை முகாமில் வைத்து பராமரிப்பதா அல்லது காட்டில் விடுவதா என்பது குறித்து தலைமை வன பாதுகாப்பு அலுவலர் முடிவு செய்யலாம்" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com