செம்மரக் கடத்தல்: 3 தமிழகத் தொழிலாளிகள் கைது

கடப்பா மாவட்டத்தில் 2 பேர், சித்தூர் மாவட்டத்தில் ஒருவர் என செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக செம்மரத் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
செம்மரக் கடத்தல்: 3 தமிழகத் தொழிலாளிகள் கைது

கடப்பா மாவட்டத்தில் 2 பேர், சித்தூர் மாவட்டத்தில் ஒருவர் என செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக செம்மரத் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டது: திருப்பதியை அடுத்த கடப்பா மாவட்டம் மைதுகூர், காஜிபேட்டை வனப்பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சில காலடித் தடங்களை கண்டனர். அவற்றைப் பின்பற்றி சென்றபோது செம்மரக் கட்டைகளுடன் சிலர் நடமாடிக் கொண்டிருந்தனர். போலீஸாரை கண்டவுடன் அவர்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டுத் தப்பியோடினர். 
அவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீஸார், இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த அரிச்சந்திரா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டி என்று தெரிய வந்தது. 
இந்நிலையில், சித்தூர்-பீலேரு இடையே செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை மதியம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 2 டன் 33 கிலோ எடையுள்ள 67 செம்மரக் கட்டைகள் இருந்தன.  அங்கிருந்து தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநரைக் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, 67 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், லாரி ஓட்டுநர்  வேலூர் மொத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபு(26) என்பது தெரிய வந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com