முறையாக ஈமச்சடங்கு நிதி: திமுகவுக்கு முதல்வர் பதில்

ஈமச்சடங்கு நிதி முறையாக அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 


ஈமச்சடங்கு நிதி முறையாக அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் இடையே திங்கள்கிழமை பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ஈமச்சடங்கு நிதி முறையாக வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினார். துரைமுருகனின் இந்த குற்றச்சாட்டுக்கு, முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:-
ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களில் யாரேனும் இறந்தால் அவர்களது ஈமச்சடங்குக்காக இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2,500 அளிக்கப்படுகிறது. இதற்காக ஆதிதிராவிட நலத் துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ. 4.67 கோடி உதவித் தொகையாக 18 ஆயிரத்து 692 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஈமச்சடங்கு நிதி குறித்து புகார் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.
துரைமுருகன்: ஈமச்சடங்குக்காக அளிக்கப்படும் தொகை போதுமானதாக இல்லை. இந்தத் தொகையை உயர்த்தி அளிக்க வேண்டும்.
முதல்வர் பழனிசாமி: ஈமச் சடங்குக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலேயே மீதம் உள்ளது. எனவே, யாருக்காவது விடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com