சுடச்சுட

  

  விபத்தில் மனைவியை இழந்த நாராயணசாமியே இப்படி சொல்லலாமா? கிரண்பேடி கேள்வி

  By DIN  |   Published on : 14th February 2019 04:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Narayanaswamy_vs_Kiran


  புது தில்லி: புதுச்சேரியில் ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல் குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, ஹெல்மெட் அணியச் சொல்வது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ஹெல்மெட் அணியச் சொல்வது தவறா? ஹெல்மெட் கட்டாயம் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா?

  மாநில  அரசின் நடவடிக்கையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுவது தவறு. இது குறித்து நாராயணசாமி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், நேற்று கடிதம் கொடுத்துவிட்டு, உடனே பதில் வரவில்லை என்று தர்ணாவில் ஈடுபடுகிறார்.

  ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது. சாலை விபத்தில் மனைவியை இழந்தவர் முதல்வர் நாராயணசாமி. அவரது மனைவி ஹெல்மெட் அணியாததால்தான் உயிரிழந்தார். தனது மனைவியை இழந்தவர் என்ற அடிப்படையில் அவரே ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தாமல், அலட்சியமாக இருக்கிறார் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai