கிராம சபைக் கூட்டம்: திமுகவுக்கு கமல் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மைக்காலமாக கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவருக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிராம சபைக் கூட்டம்: திமுகவுக்கு கமல் கேள்வி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மைக்காலமாக கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அவருக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 அண்மையில் உத்தரமேரூரில் கிராம சபைக் கூட்டத்தை கமல் நடத்தினார், தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் கூட்டத்தை நடத்தி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தனக்கு வாக்களிப்பதன் அவசியத்தையும் அவர் விளக்கினார். இது பெரும் வெற்றியைடைந்தது. இதுபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கிராம ஊராட்சிக் கூட்டம் என்ற பெயரில் பல்வேறு கூட்டங்களை பல்வேறு கிராமங்களில் நடத்தி வருகிறார். அவருடைய மகன் உதயநிதியும் சில கூட்டங்களை நடத்தியுள்ளார்.
 இந்த நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல், திமுக சார்பில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதை கடுமையாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
 தமிழகத்தில் 25 ஆண்டுகளாக நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் என்ன செய்தீர்கள். நான் சட்டப்பேரவையில் கூட சட்டையைக் கிழித்துக் கொள்ளமாட்டேன். அப்படியே கிழிந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வருவேன். தமிழன் என்பது தகுதி அல்ல. அது ஒரு விலாசம். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.
 அரசியலுக்கு வருவதற்கு வழி என்பது ஒன்றுமில்லை. யாரும் அரசியலை நீக்கிவிட்டும் வாழ முடியாது. முதல்வர் என்பவர் நாட்டை வழிநடத்தும் ஒரு அலுவலர் மட்டுமே.
 முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலை மட்டும் நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள். இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றார் கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com