ரஜினியின் முடிவு பாஜகவை பாதிக்காது

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு பாஜக-வை எந்தவகையிலும் பாதிக்காது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறினார்.
ரஜினியின் முடிவு பாஜகவை பாதிக்காது

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு பாஜக-வை எந்தவகையிலும் பாதிக்காது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறினார்.
 சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த அவர் அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என தெளிவான முடிவை நடிகர் ரஜினிகாந்த் எடுத்திருக்கிறார். அவருடைய இந்த முடிவு எந்த வகையிலும் பாஜக-வுக்கு இழப்பையோ அல்லது எதிராகவோ அமையாது. ரஜினிகாந்த்தின் இந்த முடிவு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.
 என்னைப் பொருத்தவரை, அவருடைய முடிவு பாஜக-வுக்கு ஆக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், மத்தியில் நிலையான ஆட்சி, வலுவான ஆட்சி என அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்த ஆட்சியை யார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com