ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அமைச்சர் ஜெயகுமார்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். 
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது: அமைச்சர் ஜெயகுமார்


சென்னை: ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம், கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று வெளியாவதை முன்னிட்டு தூத்துக்குடி நகர் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது. இதன் காரணமாக நகர் முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செயல்பட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று காலைல செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயகுமார் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்பதே தமிழக மக்கள் மற்றும் அரசின் நிலைப்பாடு. 

எனவே, ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

இந்நிலையில், ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று திங்கள்கிழமை அதிரடி தீர்ப்பு வெளியானது. 

தீர்ப்பில், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிரான வேதாந்தா மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் ரத்து செய்ய உச்சநீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

தீர்ப்பின் நகல் கிடைத்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com