அதிமுக - பாமக இடையேயான மக்களவைக் கூட்டணி சமரசக் கூட்டணியா?

வரும் மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் இணைந்து பாமக சந்திக்கவிருப்பது என்ற முடிவு இன்று காலை இரு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக - பாமக இடையேயான மக்களவைக் கூட்டணி சமரசக் கூட்டணியா?

வரும் மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் இணைந்து பாமக சந்திக்கவிருப்பது என்ற முடிவு இன்று காலை இரு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளில் 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 7 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில், அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்த பாமக, தற்போது அதன் தலைமையிலான கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் கட்சி வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இது ஒன்றும் சமரசக் கூட்டணி இல்லை என்றும், தான் எடுத்துக் கூறி வந்த குற்றச்சாட்டுகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் பாமக, அதிமுகவுடன் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக வைத்திருக்கும் சில கோரிக்கைகள் இது..

  • தமிழகத்தில் படிப்படியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும்.
  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.
  • நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
  • கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது அதில் சில.

எனவே, இந்த கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றிக் கொடுத்தால், இது நிச்சயம் சமரசக் கூட்டணி இல்லை என்பது உறுதியாகும். ஆனால்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com