அதிமுக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான நிலை: திருமாவளவன் அலசல்

தமிழகத்தில் அதிமுக - பாமக கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியால் திமுக கூட்டணிக்கு சாதகமான நிலை: திருமாவளவன் அலசல்


சென்னை: தமிழகத்தில் அதிமுக - பாமக கூட்டணி அமைத்திருப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை இரு கட்சித் தலைவர்களும் இன்று கூட்டாக வெளியிட்டனர்.

இந்தக் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக கூட்டணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது திமுக கூட்டணிக்கு சாதகம்.

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களின் மனநிலை தமிழகத்தில் வலுவாக உள்ளது.

அதிமுகவின் மெகா கூட்டணி என்பது வெற்றிக்கான மாயையாகவேக் கருதப்படுகிறது. இதற்கு முன் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்த போது பாமக முழுத் தோல்வி கண்டது. பாமக கொள்கையில்லாத, பேரம் பேசும் கட்சி என்பது தெரிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அக்கட்சியையே விலக்கி வைத்திருந்தார் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com