அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகள்?

மக்களவைத்  தேர்தலில் அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இரு கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகள்?

சென்னை: மக்களவைத்  தேர்தலில் அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இரு கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலில் கூட்டணி ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் செய்தியாளர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொண்டனர்.

2009ம் ஆண்டுக்குப் பிறகு 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அதிமுக - பாமக இணைந்து கூட்டாக எதிர்கொள்ள உள்ளது.

ஒப்பந்தம் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள்!
அப்போது அவர் கூறியதாவது,  2019ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் இணைந்துள்ள பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கும் என்பதையும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 7 தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், இது வெற்றிக் கூட்டணி, மகாக் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி  என்றும், புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்த மகாக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com