
மதுரையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடகுக் கடையின் பூட்டை உடைத்து இரும்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 1,500 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
மதுரை நரிமேடு கட்டபொம்மன் தெருவில் அடகுக் கடை நடத்தி வருபவர் கோபிநாத் (61).
செவ்வாய்க்கிழமை காலை கோபிநாத்தின் மகன் கதிரேசன் அடகுக் கடையை திறக்கச் சென்றபோது முன்பகுதி இரும்பு கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு, சுமார் 1500 பவுன் நகைகள் திருடப்பட்டதாகத் தெரிகிறது. தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.