அதிமுக முரண்டுபிடிக்கும் அளவுக்கு அப்படி எத்தனை தொகுதிகளைத்தான் கேட்கிறது தேமுதிக?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிலவரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமையே தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சிகளைப் பற்றிக் கொண்டது.
அதிமுக முரண்டுபிடிக்கும் அளவுக்கு அப்படி எத்தனை தொகுதிகளைத்தான் கேட்கிறது தேமுதிக?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிலவரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமையே தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சிகளைப் பற்றிக் கொண்டது.

மக்களவைத் தேர்தலையொட்டிஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன.  பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக  - பா.ம.க. இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர ஒரு மாநிலங்களவை இடமும் தர ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பில், வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பா.ஜ.க. மற்றும் பாமக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

காலை முதலே தேமுதிகவைச் சேர்ந்த சுதீஷ் உடன் பேச்சுவார்த்தை, விரைவில் கூட்டணி ஒப்பந்தம் வெளியாகும் என்றெல்லாம் பிரேக்கிங் செய்திகள் வந்து கொண்டிருந்ததேத் தவிர, கூட்டணி ஒப்பந்தம் மட்டும் வரவில்லை.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், நேற்று மாலை விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்திப்பைக்கூட, மரியாதை நிமித்தமானது என்று மாற்றப்பட்டது.

இன்று மாலை, தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக தரப்பில் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி ஒப்பந்தத்தை முடிவு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில், மத்தியில் ஆளும் பாஜகவே 5 தொகுதிகளோடு, இளைய கட்சியாக இணைந்திருக்கும் நிலையில், தேமுதிக அப்படி எத்தனைத் தொகுதிகளைத்தான் கேட்கிறது என்பதே இன்றைய கேள்வி.

அதாவது, தேமுதிக 9 மக்களவைத் தொகுதிகளையும், 1 மாநிலங்களவைத் தொகுதியையும் அதிமுகவிடம் கேட்கிறது. குறைந்தபட்சம் பாமகவுக்குக் கொடுத்ததற்கு இணையாகவாவது தொகுதிகள் கிடைத்தால் சமரசம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆனால், 2016ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு வித்தியாசத்தைக் கணக்கில் கொண்டு, அக்கட்சிக்கு வெறும் 3 தொகுதிகளைத்தான் கொடுக்க முடியும் என்று அதிமுக ஒற்றைக் காலில் நிற்கிறதாம். இதனை வலியுறுத்தவே பியூஷ் கோயல் நேற்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று வலியுறுத்தியதாகவும், ஆனாலும் தேமுதிக ஒப்புக் கொள்ளாததால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பாக மாற்றப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களிலும் அதிமுக  - பாஜக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகிறது.

ஒன்றிரண்டு தொகுதிகள் வித்தியாசம் என்றால் பேச்சுவார்த்தையில் இழுபறி எனலாம்.. இங்கே 3க்கும் 9க்கும் இடையே இழுபறி நீடிப்பதால், தேமுதிகவோ அல்லது அதிமுகவோ இரண்டில் ஒன்று மேலே ஏறியோ அல்லது கீழே இறங்கியோ வந்தால்தான் கூட்டணி ஒப்பந்தம் முடிவாகும்.

பொறுத்திருந்து பார்க்கலாம்.. விட்டுக் கொடுக்கப் போவது யார் என்று?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com