திமுக, காங்கிரஸ் கூட்டணி வலிமையான வெற்றியை பெறும்: வேணுகோபால் 

திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வலிமையான வெற்றியை பெறும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். 
திமுக, காங்கிரஸ் கூட்டணி வலிமையான வெற்றியை பெறும்: வேணுகோபால் 


திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வலிமையான வெற்றியை பெறும் என்று கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். 

மக்களவைத் தேர்தலுக்கான திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் இன்று கையெழுத்தானது. அதன்படி தமிழகத்தில் 9 தொகுதியும், புதுச்சேரியில் 1 தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி, காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அப்போது வேணுகோபால் பேசியதாவது,  

"ஸ்டாலின் ஏற்கனவே திமுக, காங்கிரஸ் இடைய கையெழுத்தான ஒப்பந்தம் குறித்து தெரிவித்தார். கடந்த 2, 3 நாட்களாக தில்லியிலும், சென்னையிலும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பிறகு, இறுதியாக இன்று இங்கு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தின்படி ஸ்டாலின் தெரிவித்ததுபோல் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  

நாட்டுக்கு இந்த கூட்டணி அவசியம். ஒட்டுமொத்த நாடே மோடி அரசு மீது கடந்த 5 ஆண்டுகளில் ஏமாற்றத்தில் உள்ளது. மோடி அரசு வாக்குறுதி அளித்த எதையுமே நிறைவேற்றவில்லை. அதேசமயம், நாட்டு மக்கள் அனைவருக்குமே மோடி அரசு இடையூறு கொடுத்து வருகிறது. அதனால், மக்கள் மோடி அரசு மீது கோபத்தில் உள்ளனர். இங்கு அதிமுக அரசு மீதும் கோபத்தில் உள்ளனர். 

ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் மக்கள் மாற்றத்தையே விரும்புகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இங்கு எத்தனை இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது உங்களுக்கு தெரியும். 

இது முதன்முறையாக கைகோர்க்கும் கூட்டணி அல்ல. நாங்கள் நீண்ட நாட்களாகவே கூட்டணியில் இருக்கிறோம். திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோதே காங்கிரஸ் தலைவர்கள் நாட்டு நலனுக்காக இங்கு வந்து ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர். 

அதேபோல் தற்போது ஸ்டாலின் தலைமையிலும் திமுக அதையே செய்கிறது. தமிழகத்தில் இருந்து நூறு சதவீதம் வெற்றியை எதிர்பார்கிறோம். 

திமுகவுடனான இந்த கூட்டணியில் காங்கிரஸ் முழு திருப்தியாக அடைந்திருக்கிறது. எந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தான பேச்சுவார்த்தைகளை இரண்டு கட்சித் தலைவர்களும் நடத்துவர். அதன்பிறகு, அது விரைவில் இறுதி செய்யப்படும்.   

எனவே, இந்த கூட்டணி தமிழகத்தில் வலிமையான வெற்றியை பெறும்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com