ஸ்டெர்லைட்: போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற பரிசீலனை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தேவையற்றது. பலமுறை வலியுறுத்தியும், மூடப்பட்ட ஆலைக்கு எதிராக போராட வேண்டாம் என வலியுறுத்தியும், தவறுதலாக வழிநடத்தப்பட்ட காரணத்தினால் அந்த சம்பவம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியது திமுக, மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு பரிசீலனை செய்யும். மக்களவைத் தேர்தலுக்காக மகத்தான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்றார் அவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com