அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி: ஓபிஎஸ் 

நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி: ஓபிஎஸ் 


நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக அதிமுக, பாஜக, பாமக இடையிலான கூட்டணி உறுதியானது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகளும், பாமகவுக்கு 7 மக்களைத் தொகுதியும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேமுதிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. 

இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தார். இதையடுத்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி.கே.பழனிசாமி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையின் முடிவில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி  என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் முறையே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி.கே.பழனிசாமியும் கையெழுத்திட்டனர். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி கையெழுத்திட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com