சுடச்சுட

  
  amithsha1

     
  ராமநாதபுரத்தில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார்.

  மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் அமித் ஷா, ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம் காத்தானில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை பகுதிக்கு காரில் செல்கிறார். இந்த கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஜே.பி நட்டா, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

  அமித் ஷா வருகையை அடுத்து ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai