பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்   

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்தார். 
பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்   

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகம் வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக, பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகியுள்ளது. 

அதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்து அதிமுகவுடனான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தொடர்ந்து, தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழகம் வருகை தந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்துப் பேசினார். மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்தும், தேமுதிக கூட்டணி குறித்தும் அமித் ஷாவிடம் அவர் விவாதித்தாக கூறப்படுகிறது. உடன் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.பி கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com