அதிமுக எம்பி சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார்.
அதிமுக எம்பி சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக எம்பி ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 62. 

விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டி வீட்டில் இருந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எம்பியின் கார் சாலை தடுப்பில் மோதியதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் அருமைச்செல்வம் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ராஜேந்திரன் எம்பி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் திமுக வேட்பாளரை விட சுமார் 2 லட்சம் ஓட்டு அதிகம் பெற்று எம்பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com