தேமுதிகவின் பலம் எங்களுக்குத் தெரியும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா 

எங்களுடைய பலம் எங்களுக்குத் தெரியும். எனவே, எந்தக் கட்சியோடும் தேமுதிகவை ஒப்பிடவேண்டாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
தேமுதிகவின் பலம் எங்களுக்குத் தெரியும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா 


எங்களுடைய பலம் எங்களுக்குத் தெரியும். எனவே, எந்தக் கட்சியோடும் தேமுதிகவை ஒப்பிடவேண்டாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக,  பாஜக இடம்பெறுவது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில், தேமுதிகவையும் அதிமுக கூட்டணியில் இடம்பெறச் செய்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்  கோயல் நேரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், கூடுதல் இடங்களை தேமுதிக கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில், விஜயகாந்தின் சாலிகிராமம் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த நடிகர் ரஜினிகாந், விஜயகாந்தை சந்தித்துப் பேசிய பிறகு பிரேமலதா அளித்த பேட்டி:
மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி இல்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் . உரிய நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை விஜயகாந் அறிவிப்பார். தேமுதிகவுக்கான வாக்கு சதவீதம் எங்களுக்கு தெரியும். எங்களுக்கான தொகுதிகள் கிடைக்கும். எந்த தொகுதிகள் என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார்.
எந்த கட்சியுடனும் தேமுதிகவை ஒப்பிட வேண்டாம். எங்களின் பலம் என்ன என்பது எங்களுக்கும் தெரியும். தொண்டர்களுக்கும் தெரியும். ஒரு வாரம் பொறுத்திருங்கள். நல்ல முடிவு தெரியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com