ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே கிடையாது: என்ன சொல்கிறார் பாண்டியராஜன்..!

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதைத் தவிர
ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே கிடையாது: என்ன சொல்கிறார் பாண்டியராஜன்..!

 
சென்னை:
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதன்காரணமாக ரஜினிகாந்த் மக்கள் மன்றம் தொடர்பான நிர்வாகிகள் நியமனம் மற்றும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடனான நேரடி சந்திப்பையும் நடத்தினார் ரஜினிகாந்த். பின்னர் 90 சதவீத கட்சிப் பணிகள் முடிவடைந்துள்ளதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர்களை  திடீரென சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு என அறிவித்தார். 

மேலும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. தேர்தலில் தனது பெயர், புகைப்படம், மக்கள் மன்றம் தொடர்பான எதையும் தவறாக பயன்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்த ரஜினிகாந்த், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் புகைப்பட கண்காட்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்ப்பார்கள் என நம்புகிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். தண்ணீர் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒரே கட்சி நாங்கள் தான். அதற்காக எடுத்துள்ள முயற்சிகளை அமைச்சர் வேலுமணி தெளிவாக சட்டப்பேரவையில் கூறியுள்ளார். 

அவசரகால நடவடிக்கையாக நாங்கள் செய்கிற விஷயமாக இருக்கட்டும், நீண்டகால திட்டங்களுக்காக நாங்கள் செய்கிற விஷயங்கள், உதாரணத்திற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாகட்டும் ரொம்ப தெளிவாக நாங்கள் பதிலளித்துள்ளோம். 

ஆகவே, ரஜினிகாந்த் அளித்த அறிக்கையின்படி ரஜினியின் ரசிகர்கள் இருந்தால் கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைவிட அவரது ரசிகர்களுக்கு வேறு வழியே இல்லை என்று பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com