வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்ட நடைமுறைகளுக்கு தனி இணையதளம்

வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான விதிகள், நடைமுறைகளை பொது மக்கள் எளிதாக அறிந்து கொள்ள தனி
தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டப் புத்தகத்தை, தலைமைச் செயலகத்தில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிடபெறுகிறார் துணை முதல்வர்
தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டப் புத்தகத்தை, தலைமைச் செயலகத்தில்  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிடபெறுகிறார் துணை முதல்வர்


வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான விதிகள், நடைமுறைகளை பொது மக்கள் எளிதாக அறிந்து கொள்ள தனி இணையதளத்தை (www.tenancy.tn.gov.in)  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
இந்த இணையதளத்தில்  சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இணைய சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், வாடகை அதிகார அமைப்பின் மூலம் ஒப்பந்தப் பதிவு எண் அளிக்கப்படும். இதன்மூலம், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைப் போக்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. 
இதன்படி, சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு வருவாய் கோட்ட அளவில், அதிகார அமைப்பு ஏற்படுத்தப்படும். 
அதனைச் செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படுவார்.
சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள்: இந்தப் புதிய சட்டப்படி, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். வாடகை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாடகை விதிக்கப்படும். குத்தகை விடுபவர் மூன்று மாத வாடகையை முன்பணமாகப் பெற முடியும். புதிய சட்டத்தில் உரிமைதாரர் மற்றும் குத்தகைதாரர் இணைந்து வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வளாகத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com