மாநில சுயாட்சி - தமிழின எழுச்சிக் கொள்கைகளில் உறுதி: ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சூளுரை

மாநில சுயாட்சி - தமிழின எழுச்சிக் கொள்கைகளில் உறுதி: ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக சூளுரை

மாநில சுயாட்சி, தமிழின எழுச்சி உள்ளிட்ட கொள்கைகளில் எப்போதும் உறுதியோடு இருப்போம் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது. 

மாநில சுயாட்சி, தமிழின எழுச்சி உள்ளிட்ட கொள்கைகளில் எப்போதும் உறுதியோடு இருப்போம் என்று அதிமுக உறுதி அளித்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் இணைந்து சனிக்கிழமை வெளியிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணியாற்றிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மனிதாபிமானமிக்க ஆட்சி முறையாலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களாலும் இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் வளர்ந்து இருக்கிறது. 

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு வசதி, பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் நலன் காத்தல் என ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.அவரது நினைவைப் போற்றி வணங்கும் இந்த வேளையில், அவருக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடமைகள் பல உள்ளன என்பதை மறந்து விடக் கூடாது.
பல்வேறு சோதனைகளுக்கு இடையே கட்சியைக் காத்திருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டு இருக்கிறோம். அதிமுக அரசை மக்கள் அனைவரும் போற்றும் வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக நடத்தி வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய பாதையில், அவர் செய்த சாதனைகள் தொடரும் வகையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறோம்.

தேச நலன் காக்கும் கூட்டணி: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேச நலன் காக்கும் வெற்றிக் கூட்டணியை நாம் உருவாக்கியுள்ளோம். கடந்த 1998-இல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியது போன்றே இந்தக் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளோம். 

அதிமுக என்றைக்கும் தனது அடிப்படைக் கொள்கைகளான மாநில சுயாட்சி, மதச் சார்பின்மை, சமூக நீதி, பெண்களுக்கு முக்கியத்துவம், ஏழை-எளியோர் உழைக்கும் மக்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு, தமிழின எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணத்தைத் தொடர்வோம். இவையே அதிமுகவின் நிலைப்பாடு ஆகும்.  

இப்போதும் தனது பாதையையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு அதிமுக நிற்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்றதைப் போன்றே மகத்தான வெற்றிகளை வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத் தேர்தல்களிலும் பெற்று அந்த வெற்றிகளை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க உறுதிபூண வேண்டும். 

அதிமுக அனைத்துத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்றிட அயராது உழைப்போம் என்று தங்களது கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வமும், கே.பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com