Enable Javscript for better performance
வேளாண் பொருள்களுக்கு நியாய விலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வேளாண் பொருள்களுக்கு நியாய விலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

    By DIN  |   Published On : 25th February 2019 04:56 AM  |   Last Updated : 25th February 2019 04:56 AM  |  அ+அ அ-  |  

    cm-piyueshgoel

    விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.து

    வேளாண் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    மத்திய அரசின் சார்பில் "பிரதமரின் கிஸான் சம்மான்' நிதித் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.   தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் முதல் தவணைத் தொகையை வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

    விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவியை வழங்கிப் பேசியது: 

    நாடு முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சியடையும் வகையில்  "பிரதமரின் கிஸான் சம்மான் நிதி' திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.    கோடிக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தியுள்ளார்.  இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும்.  இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு  சிறு, குறு விவசாயிகள், தமிழக மக்கள் ஆகியோர் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

    அனைவருக்கும் உணவளிக்கும் உன்னத பணியை செய்து வரும் விவசாயிகள்  நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வருகிறார்கள்.  அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசும் தமிழக அரசும் வழங்கி வருகின்றன.  நான் தற்போது இங்கு பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தேனியிலிருந்து ஒருவர், தனக்கு முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரம் தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு வந்துவிட்டதென்று  தமிழக வேளாண் துறையின் முதன்மைச் செயலருக்கு தெரிவித்திருக்கிறார்.  பிரதமர் உத்தரப் பிரதேசத்தில் தொடங்கி வைத்த மறு நொடியிலேயே அவருடைய வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் வந்துள்ளது . 

    22 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள்... இந்தத் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் விவரங்கள் மத்திய அரசின் வலைதளத்தில் தமிழக அரசின் வேளாண்மைத் துறையால்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், முறையான சரிபார்த்தலுக்குப் பின் இன்றைக்கு சிறு, குறு விவசாய குடும்பங்களுக்கு மத்திய அரசால் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, முதல் தவணையின் முதல் கட்டமாக இன்றே தலா ரூ. 2,000  வழங்கப்பட்டிருக்கின்றது.  தற்போது வரை ரூ. 277 கோடி இதற்காக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.  

    மத்திய அரசைப் போன்றே தமிழக அரசும் இங்குள்ள விவசாயிகளுக்காக குடிமராமத்து உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.  

    வேளாண் விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும், வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் பொருள்களை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக தயார் செய்து சந்தைப்படுத்த, தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் 10  பூங்காக்கள் நிறுவப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

    முதல் கட்டமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு உணவுப் பூங்கா அமைக்கவும், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஒரு உணவுப் பூங்கா அமைக்கவும் முதற்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார் அவர். 

    முன்னதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயிகளுக்கான திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார்.  

    விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும்  திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்த 
    முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு உள்ளிட்டோர்.


    இசைப் பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்


    தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரால் அழைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

    இது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான நிதியுதவி வழங்கும் விழாவில் அவர் பேசியது:   

    தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  

    அதையேற்று அவரது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 24) தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரால் அழைக்கப்படும்  என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp