சென்னையில் தயாராகும் நீலகிரி மலை ரயிலுக்கான அதி நவீன பெட்டிகள்

பாரம்பரிய நீலகிரி மலை ரயிலுக்கான அதிநவீன ரயில் பெட்டிகள், சென்னை  ஐ.சி.எப்  நிறுவனத்தில்  தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், முதல்
நீலகிரி மலை ரயிலுக்கு  சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டிகள்.
நீலகிரி மலை ரயிலுக்கு  சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன ரயில் பெட்டிகள்.


பாரம்பரிய நீலகிரி மலை ரயிலுக்கான அதிநவீன ரயில் பெட்டிகள், சென்னை  ஐ.சி.எப்  நிறுவனத்தில்  தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாகத்தயாரான  4 ரயில் பெட்டிகள்  சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.  
இது குறித்து, ஐ.சி.எப். நிறுவன  அதிகாரி கூறியது: 
சென்னையில் உள்ள ஐ.சி.எப். (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) நிறுவனத்தில்  நீலகிரி மலை ரயில்சேவைக்காக முதன்முறையாக அதிநவீன ஸ்டீல் ரயில் பெட்டிகளை  தயாரித்துள்ளது.  மொத்தம் 15 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,  முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட  4  ரயில் பெட்டிகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
ஒரு  முதல் வகுப்பு பெட்டி, இரண்டு  2-ஆம் வகுப்பு பெட்டி, சரக்குகளை ஏற்றிச் செல்லும் பெட்டி என வகையான 4 ரயில் பெட்டிகள், ரயில்பாதை வழியாக மேட்டுப்பாளையம் சென்று , நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்தப்படும். மீதம் உள்ள 11 ரயில்பெட்டிகளும் விரைவில் தயாரித்து அனுப்பப்படும்.
4 பெட்டியில் 146 பேர் பயணிக்கலாம்: முதல் வகுப்புப் பெட்டியில் 32 பயணிகளும், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 44 வீதம் இரண்டு பெட்டிகளுக்கு  88 பயணிகளும், சரக்குகளை ஏற்றுச் செல்லும் ரயில் பெட்டியில் 26 பயணிகளும் என மொத்தம் 146 பயணிகள் இந்த ரயில் தொடரில் அமர்ந்து பயணிக்கலாம்.
சிறப்பம்சங்கள்: இவைகள் துருப்பிடிக்காத இரும்பு உலோகத்தால்  தயாரிக்கப்பட்ட பெட்டிகள் ஆகும். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு உடமைகள்(லக்கேஜ்) பெட்டி என மூன்று வகையான பெட்டிகளைக் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் உள்ளே அமர்ந்து, வெளிப்புற இயற்கைக் காட்சிகளை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில், பெரிய கண்ணாடிகளுடன்  ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. செங்குத்தான மலைப்பாதையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக பயணிக்க கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் நேரடியாக ரயில் பெட்டியின்  உள்ளே செல்லும் வகையில், இரண்டாம் வகுப்பு லக்கேஜ் ரயில் பெட்டியில் அகலமான கதவு மற்றும் சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இப் பெட்டியில், வசதியாக பயணிக்க வசதியான இருக்கைகள், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.  பிரேக் மேன் தனியாக அமர்ந்து பிரேக் இயக்க வசதி  செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com