மே மாதம் ஊட்டி போவதாக இருந்தால் இது உங்களுக்கான செய்திதான்!

உதகையில் மலர்க் கண்காட்சி மே 17ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, மே மாதம் ஊட்டி செல்ல விரும்பும் மக்கள் இந்த நாட்களை தேர்வு செய்து செல்லலாம்.

குன்னூரில் பழக் கண்காட்சி மே 25 மற்றும் மே 26ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி, உதகையில் ரோஜா கண்காட்சி ஆகிய மூன்றும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் சுப்பையன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா ஆகியோர் தலைமையில் உதகையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இம் முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com