
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கோவை மாவட்டம், ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய் வழியாக எலவக்கரை குளத்தின்கீழ் பாசனம் பெறும் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையேற்று, மார்ச் 1-ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு விநாடிக்கு 60 கனஅடி வீதம் மொத்தம் 57 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால், கோவை மாவட்டம் சமத்தூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் ஜல்லிப்பட்டி, துறையூர், கம்பாலப்பட்டி, கரியாஞ்செட்டிபாளையம் கிராமங்களின் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.