
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில்,
காற்றின் திசை மாறுபாடு, குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேசமயம் உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது லேசாக தூறல் இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.